வடக்கு கிழக்கு இலண்டன் தமிழர் நலன்புரி ஒன்றியம் உதவிக்கரம் நிகழ்வில் மூலம் ஈழத்தில் கல்விப் பணிக்கு உதவி
[ சனிக்கிழமை, 26 மார்ச் 2011, 02:13.44 PM GMT ]
லண்டன் சிவன் ஆலயத்தில் கடந்த 19.03.2011ம் திகதி அன்று நடாத்தப்பட்ட வடக்கு கிழக்கு இலண்டன் தமிழர் நலன்புரி ஒன்றியத்தின் உதவிக்கரம் என்னும் நிகழ்வு மூலம் பெறப்பட்ட நிதிகள்…
இலங்கை திருநாட்டில் கடந்த யுத்த சூழலாலும் வெள்ள அனர்த்தத்தாலும் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் வறிய மாணவர்களின் கல்வியை மேம்படுத்தும் பணிக்கு வழங்கப்படவுள்ளன. இவ்வகையில் 4525 ஸ்ரேலிங் பவுண்ட்ஸ் நிதி உதவிக்கரம் நிகழ்வு மூலம் அன்பளிப்பாக கிடைக்கப்பெற்றுள்ளது. இந்நிதி மூலம் கிட்டத்தட்ட 4500 பாதிக்கப்பட்ட வறிய மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்படவுள்ளன. இதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. Continue reading
